Saturday, April 10, 2010

இப்படியும் பலர் (காதலா காமமா)

சென்ற பதிப்பின் தொடர்சிங்க இது. இது என்ன பேய் விடியற்காலை காலை நேரத்தில் வருகிறது என எனக்கு ஒரு சந்தேகம். அன்று காலை வாக்கிங் செல்ல நீண்ட நாட்களுக்கு பிறகு எழுந்தேன்.(பேய் பார்க்க-அதுவும் பெண் பேய் வேறு :)). எனது சந்தேகம் சரி. கதவை திறந்தால் என்னை கண்டதும் ஒரு உருவம் அருகில் இருந்த காருக்கு பின் பதுங்கியது. நான் கார் அருகில் சென்றேன். பேய் அல்ல பெண்தான். என்னை பார்த்ததும் மிக அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். தெரு திரும்புகையில் எங்கள் தெருவுக்கு வழக்கமாக வரும் பூக்காரம்மா அந்த வீட்டை பார்த்துகொண்டே வருவதை பார்த்து ஏதோ மூளையில் பொறிதட்டியது. (உங்களுக்கு ஏது அது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது).பூக்கரம்மாவை அழைத்தேன். அவளுக்கு பயம் முகத்தில் தெரிந்தது. யார் அந்த பெண் என்று சற்று அதிகார தொனியில் கேட்டவுடன் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள். ஹிண்ட்ஸ் டெவலபிங் மாதிரி சொல்லிடறேன்.

அந்த பெண் மதுரை. பக்கத்துக்கு வீடுகாரனும் மதுரை. அருகருகே வீடு. காதலித்தார்கள். பெண் வசதி குறைவு. சென்னைக்கு அழைத்து வந்து வேலை வாங்கி தந்து இருக்கிறான். பெண்ணுக்கும் அவள் தாய்க்கும் சென்னையில் வீடு பார்த்து தந்திருக்கிறான். திருமணம் தவிர மற்ற எல்லாம் (புரிந்து கொள்ளவும்) முடிந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பெண்ணை வசதி அதிகம் என்று திருமணம் செய்துகொண்டு அந்த பெண்ணுக்கு தெரியாமல் குடிவந்துவிட்டான். அது தெரிந்து அவன் வீட்டருகே வந்த அவளை நண்பி என சொல்லி மனைவியை விட்டு காபி கொடுத்து அனுப்பி இருக்கிறன் ஒரு நாள். அவள் போகும்போது அழுதுகொண்டே போவதை பார்த்த பூக்காரி நடந்ததை அவளிடம் இருந்து தெரிந்து கொண்டாள். அவள் குறி சொல்லுபவள். மந்திரித்து விபுதி கொடுக்கிறேன். செவ்வாய் வெள்ளி கிழமையில் அவன் வீட்டு வாசலில் போட்டால் அவன் மீண்டும் உன்னிடம் வந்து விடுவான் எனகூறி இருக்கிறாள். இது தான் நடந்தது.

காதலிப்பது தவறில்லை. எதிலும் எல்லை மீறாமல் ( தவறு என்று சொன்னால் குஷ்பு சண்டைக்கு வருவார்) நடந்திருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. மணமாகிவிட்டது என்று தெரிந்தும் வேறு எதுவும் செய்வதை விட்டு இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் கெடுக்க நினைத்த அந்த பெண்ணையும் , இரு பெண்களின் வாழ்வில் (இரு பெண்கள் மட்டும் தான? ) விளையாடி கொண்டிருக்கும் அந்த சாப்ட்வேர் இஞ்சினியரையும் எப்படி புகழ்வது எனப்புரியாமல் எங்கள் தெரு மக்கள். (பின்குறிப்பு - பூக்காரியை எச்சரித்து அனுப்பினார்கள்)

3 comments:

  1. என்ன‌ ம‌துரை எல்லாம் ஒன்னு சேந்து இருக்கீங்க‌..
    பொன்னு ம‌துரை, அந்த‌ சாஃப்ட்வேர் இன்ஜீனியர் ம‌துரை..
    நீங்க‌ ம‌துரை.. நீங்க‌ இப்ப‌ சாஃப்ட்வேர் இன்ஜீனியர்..
    க‌ல‌க்குங்க‌...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Enakku andha tiramai illapa. Onnu vachey samalikka mudiyala

    ReplyDelete