Friday, March 26, 2010

இது அடுத்தாத்து சமாச்சரம்க

எங்கள் தெரு சென்னைல கொஞ்சம் வித்தியாசமான தெரு. எப்படி சொல்லுறேனா காலைல 5 மணி 5.30 மணிக்கெல்லாம் எல்லார் வீட்லயும் வாசல் தெளிச்சு கோலம் போட்டுடுவாங்க. நான் வழக்கம் போல் 6-6.30 கு தான். சென்றவாரமும் ஒரு நாள் அப்படி தான் விடிந்தது எனக்கு. மாடில இருந்து கீழ இறங்கினால் என் மனைவியிடம் ஒரே பரபரப்பு. தெருவில் எல்லா வீட்டு பெண்களும் கூட்டம் போட்டு பேசி கொண்டிருதார்கள். நான் என்னவென்று என் மனைவியை அழைத்து கேட்டேன். என் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் வீட்டிலுள்ள பெண்மணி காலை ஐந்து மணியளவில் கோலம் போட எழுந்துள்ளார். இருளும் பணியும் சூழ்ந்த நேரம் அது. அப்போது என் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டு வாசலில் சுமார் ஐம்பது வயதுள்ள ஒரு பெண்மணி ஏதோ தூவிகொண்டிருபதை பார்த்திருக்கிறார். இவர் பார்த்ததை அந்த பெண் கவனிக்கவில்லை போலும். பின் விறுவிறுவென்று அருகில் உள்ள பஸ் ஸ்டாப் பக்கம் போய் விட்டார் அந்த பெண்மணி. எங்கள் தெரு பெண் பயந்து போய்விட்டார். சற்று வெளிச்சமும் அருகில் உள்ள வீட்டு பெண்கள் எழுந்தவுடன் அவர்களையும் அழைத்து கொண்டு அங்கே சென்று பார்த்துள்ளார். ஒரே விபூதியாக அங்கே தூவபட்டிருந்தது போலும். அனைத்து பெண்களுக்கும் பயம் பற்றிக்கொண்டது. இது தான் விஷயம். நானும் விபுதி கொட்டிருப்பதை பார்த்தேன். நல்ல வேலையாக அந்த வீட்டில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்தார்கள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. அவர் சாப்ட்வேர் எஞ்சினியர். பெண் வேலை பார்கவில்லை. பெண் கர்ப்பமாக இருப்பதால் தாய் ஊருக்கு சென்றுள்ளார். அவர் ஊரில் இருந்து வந்தவுடன் மனைவிடம் சொல்லவேண்டாம் எனகூறி நான் அவரிடம் விசயத்தை சொன்னேன். நல்ல வேலையாக அவரிடம் பயம் தெரியவில்லை. மனுஷன் நம்மள போல் இதெல்லாம் நம்பமாட்டார் போலன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டேன். மனைவி ஊரில் இல்லாததால் தனியாக தான் இருந்தார். அடுத்தநாள் காலை அவர் வீடு முழுக்க ஒரே புகை மயம். சாமீ பாடல் ஒலித்து கொண்டிருந்தது. சரிதான் இவரும் மற்ற பெண்கள் போல் பயந்து விட்டார் போல என நினைத்துகொண்டேன். இரவு அலுவலகம் முடிந்து வந்த என்னிடம் என் மனைவி சொன்னார் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீட்டை காலிசெய்யபோவதாக. காலியும் செய்து விட்டார்.

மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் எதிர் வீட்டுப்பெண்மணி கோலம் போட எழுந்து வாசல் வரும்போது அதே வீட்டு வாசல் அருகில் ஒரு இளம் பெண் சுமார் இருபத்தி ஐந்து வயது இருக்கும். வெள்ளை நிற சுடிதார் அணிந்து மிக நீளமான கூந்தலுடன். பயந்து விட்டார் எதிர் வீட்டு பெண்மணி. வாளியை கீழே போட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். சற்று நேரம் கழித்து வெளியே எட்டி பார்த்தால் அந்த வெள்ளை நிற சுடிதார் பெண் நடந்து சென்றுகொண்டிருபதை பார்த்துள்ளார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வரை ஆறு மணிக்குத்தான் எல்லா வீட்டிலையும் கோலம். என் மனைவி சும்மாவே பயந்த சுபாவம். இந்த விஷயம் கேட்டு அவ்வளவு தான். நல்ல வேலையாக என் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட திருப்பதி குடும்பத்துடன் சென்றிருந்தேன். திரும்ப வந்து பார்த்தால் ........

சாரிங்க. என் பெண் லீவு நாள் கூட கம்ப்யூட்டர் தான என் கூட விளையாட மாட்டியானு திட்டுரா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சீக்கிரம் பாகம் இரண்டுன்னு போடுறேன்.

Thursday, March 11, 2010

முயற்சி

கடைசியாக படித்த ஒரு புத்தகத்தின் தாக்கம்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளாக இருந்து வந்தான். யாரிடமும் அவன் பேசுவது இல்லை. ஒரே மரத்தடியில் எப்போதும் அமர்ந்து இருப்பான். ஆனால் பார்பவர்கள் அவனுக்கு பிச்சை போட்டனர். ஒரு நாள் அவன் இறந்து போய் இருந்தான். ஊர் மக்கள் அதே மரத்தடியில் அவனை புதைக்க முடிவு செய்தனர். அந்த இடத்தை தோண்டிய போது அங்கு ஒரு வெண்கல பாத்திரத்தில் நிறைய பொற்காசுகள் இருப்பதை பார்த்தனர். அவன் சும்மா இராமல் அந்த இடத்தை தோண்டி இருந்தால் அவன் அந்த பொற்காசுகளை கண்டு பிடித்து ஒரு பெரியபணக்காரனாக மாறி இருக்கலாம். ஒரே இடத்தில சோம்பேறியாக இருந்ததால் அவன் கடைசிவரை பிச்சைகாரனாக இருந்து விட்டான்.

நம்மில் பலர் அந்த பிச்சைக்காரன் போல் ஒரே இடத்தில இருந்து நம் திறமைகளை சரிவர பயன்படுத்தாமல் கடைசி வரை சாதாரண பணியாளனாக இருந்து விடுகிறோம். வாய்புகளை சரிவர பயன்படுத்தும் ஒருசிலரே பேர் சொல்லும் வகையில் கோடீஸ்வரனகவோ இல்லை சிறந்த தொழில் அதிபராகவோ ஏற்றம் காண்கிறனர். நம்மில் பலர் முயற்சியும் இல்லாமல் வரும் வாய்ப்புகளை பெரும்பாலும் நழுவ விடுகின்றனர். நானும் அந்த பலரில் ஒருவனாக ...